by Staff Writer 09-01-2020 | 1:08 PM
Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ திடீர் விஜயம் மேற்கொண்டார்.
தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி முதலில் வௌிநோயாளர் பிரிவை கண்காணித்தார்.
இதன்போது, சிகிச்சை பெற சென்றிருந்த நோயாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கொழும்பிற்கு வௌியில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள்
தொடர்பில், நோயாளர்கள் ஜனாதிபதிக்கு தௌிவூட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
தேசிய வைத்தியசாலையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.