ஶ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்

ஶ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்

ஶ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2020 | 1:50 pm

Colombo (News 1st) கொழும்பிலிருந்து லண்டன் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயணப் பாதைகளை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மாற்றியுள்ளது.

ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக்கின் வான்பரப்புகளைத் தவிர்த்து பயணிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றநிலையை அவதானித்து வருவதாகவும் இதன்பிரகாரம் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பயணிகளினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்