யாழ்ப்பாண இளைஞர் துருக்கியில் உயிரிழப்பு

யாழ்ப்பாண இளைஞர் துருக்கியில் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2020 | 7:30 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளார்.

துருக்கியிலிருந்து சிரியாவிற்கு பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகவரூடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் கூறினர்.

துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்