by Bella Dalima 08-01-2020 | 3:39 PM
Colombo (News 1st) உக்ரைன் விமானம் ஈரானின் தெஹ்ரானுக்கு அருகில் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நோக்கிப் பயணித்த உக்ரைனுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் தெஹ்ரானுக்கு அருகில் விபத்திற்குள்ளானது.
விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்திற்கு காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.