ஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்

ஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்

ஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2020 | 2:05 pm

Colombo (News 1st) ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை செனகல் அணியின் சாடியோ மனே (Sadio Mane) சுவீகரித்துள்ளார்.

ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கல் விழா நேற்றிரவு இங்கிலாந்தில் நடைபெற்றது.

எகிப்து அணியின் நட்சத்திரமான மொஹமட் சாலா விருது வழங்கல் விழாவில் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

எனினும், வாக்குகளின் அடிப்படையில் மொஹமட் சாலாவை வீழ்த்தி, Sadio Mane இந்த விருதை முதல் தடவையாக சுவீகரித்துள்ளார்.

27 வயதான Sadio Mane கழகமட்ட போட்டிகளில் லிவர்பூல் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

முன்னாள் வீரரான El Hadji Diouf க்கு பின்னர் ஆபிரிக்க வீரர் விருதை வென்ற முதலாவது செனகல் வீரராகவும் இதன்போது Sadio Mane பதிவாகியுள்ளார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மொஹமட் சாலா இந்த விருதை சுவீகரித்திருந்தார்.

குறித்த 2 வருடங்களிலும் Sadio Mane இரண்டாமிடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்