அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: சுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: சுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2020 | 4:46 pm

Colombo (News 1st) சட்டரீதியிலான அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனி சில்வா இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார்.

சட்டரீதியிலான அனுமதிப்பத்திரமின்றி தமது காரில் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

வழக்கின் சாட்சியங்களை உரிய முறையில் உறுதிப்படுத்த தவறியுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாந்த ரணசிங்க முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், வழக்கு விசாரணையின் நிறைவில் சந்தேகநபர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்