by Staff Writer 07-01-2020 | 7:59 PM
Colombo (News 1st) :- கழுத்து அழுகல் பங்கஸ் மற்றும் அறக்கொட்டி நோயால் தமது பயிர்செய்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.
அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த இந்த நெற்செய்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிந்தவூர், சம்மாந்துறை , பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பகுதிகளில் உள்ள நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.