Update: சரண குணவர்தனவிற்கு பிணை

Update: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு பிணை

by Staff Writer 07-01-2020 | 11:04 AM
Colombo (News 1st)  Update : 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன, மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். --------------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முறையற்ற கொடுக்கல் வாங்கலூடாக அரசிற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சரண குணவர்தனவிற்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன செயற்பட்ட 2007ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 3 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 9,60,000 ரூபா வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.