by Staff Writer 07-01-2020 | 3:35 PM
Colombo (News 1st) கலால் வரி சட்டங்களை மீறியமை தொடர்பில் கடந்த வருடம் 43,128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4252 பேர் பெண்கள் என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக உள்ளூர் மற்றும் சர்வதேச மதுபானங்களை உற்பத்தி செய்தமை, தம்வசம் அவற்றை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை அபராதமாக அறிவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக கலால் வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.