மெக்ஸிக்கோவில் 60,000 பேர் மாயம்

மெக்ஸிக்கோவில் 60,000 பேர் மாயம்

மெக்ஸிக்கோவில் 60,000 பேர் மாயம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 12:26 pm

Colombo (News 1st) மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதிலிருந்து 60,000 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய தரவுகளின் பிரகாரம் 61,637 பேர் நாட்டில் காணாமற்போயுள்ளனர். இதில் 25 வீதமானோர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, இதனைத்தவிர மெக்ஸிக்கோவில் கடந்த வருடத்தில் மாத்திரம் 31,000 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போன சம்பவங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு நாட்டின் பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்