முறிகள் மோசடி: தடயவியல் கணக்காய்வு அறிக்கையை வழங்க முடியாது என அறிவிப்பு

முறிகள் மோசடி: தடயவியல் கணக்காய்வு அறிக்கையை வழங்க முடியாது என அறிவிப்பு

முறிகள் மோசடி: தடயவியல் கணக்காய்வு அறிக்கையை வழங்க முடியாது என அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 10:12 pm

Colombo (News 1st) முறிகள் ​மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது உகந்ததல்ல என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எனினும், குறித்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இயலுமை சபாநாயகருக்கு உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், முன்னுதாரணங்களை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்