மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது

மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது

மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 11:55 am

Colombo (News 1st) பாடசாலை மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் அம்பாறை – செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரதன் ஓட்டப்போட்டிக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைக்காக குறித்த மாணவிகள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தங்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

18, 14 மற்றும் 17 வயதான இரண்டு மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்