கோல்டன் குளோப் விருதுகள்: சிறந்த திரைப்படமாக ‘1917’ தெரிவு

கோல்டன் குளோப் விருதுகள்: சிறந்த திரைப்படமாக ‘1917’ தெரிவு

கோல்டன் குளோப் விருதுகள்: சிறந்த திரைப்படமாக ‘1917’ தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2020 | 4:43 pm

77 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்சில் நடைபெற்றது.

இதில் சிறந்த திரைப்படமாக முதலாவது உலகப்போரை விபரிக்கும் ‘1917’ என்ற ஹொலிவுட் திரைப்படம் தெரிவாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் சாம் மெண்டிஸ் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த ஜோகுயின் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

அதேபோல், சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெல்வேகருக்கு வழங்கப்பட்டது. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பான Once Upon a Time in Hollywood சிறந்த இசை மற்றும் நகைச்சுவை படமாகத் தெரிவாகி விருதுகளைப் பெற்றது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜோக்கர் படத்திற்காக ஹில்டர் குனாடோட்டிருக்கு கிடைத்துள்ளது. இது தவிர பல்வேறு பிரிவுகளில் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, குணச்சித்திர பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்