கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பிலான கலந்துரையாடல்

கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பிலான கலந்துரையாடல்

கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பிலான கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 7:58 am

Colombo (News 1st) கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (07) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துலையாடலுக்கு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தெரிவுக்குழு, அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக் குழுக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய இணக்கப்பாட்டை எட்டுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஜனாதிபதி நிறைவு செய்ததுடன், 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கலந்துரையாடப்பட்டதுடன், ஆளும் கட்சியினரின் அதிக பெரும்பான்மையுடன் இந்த குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களையும் இந்த தெரிவுக் குழுவிற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என இதன்போது எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்