குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 7:22 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஷானி அபேசேகர இதற்கு முன்னர் காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றினார்.

இதன் பின்னர் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதுடன், தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்