விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 பேர் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 பேர் கைது

by Staff Writer 06-01-2020 | 7:19 PM
Colombo (News 1st) விசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 136 பேர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பில் இந்தியர்கள் 82 பேர், பாகிஸ்தானியர்கள் 12 பேர், மாலைதீவு பிரஜைகள் 10 பேர், நைஜீரியர்கள் 8 பேர், சீன நாட்டவர்கள் 6 பேர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர், கனேடியர்கள் நால்வர், தாய்லாந்து நாட்டவர்கள் இருவர், சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் மற்றும் அமெரிக்கர் ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, கத்தார், சுவீடன், ஆப்கானிஸ்தான், ஈரானிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில், விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களைக் கைது செய்யும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்