by Staff Writer 06-01-2020 | 5:49 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் 6 மாதங்களுக்கு பேர்ப்பச்சுவல் நிறுவனத்தினால் முதல்நிலை வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
முறிகள் மோசடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கும் விசாரணைகளைத் தொடர்வதற்காக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.