Colombo (News 1st) இளைஞர்கள் மனதை இசையால் கட்டிப்போட்டுள்ள இசைப்புயல் A.R. ரஹ்மான் இன்று (06) தனது 53ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
ரஹ்மானின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் தமக்குப் பிடித்தமான அவரது பாடல்களை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டு ஆஸ்கார் விருதுகளைத் தன்னகப்படுத்திய இசைப்புயல் A.R. ரஹ்மான், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இசையமைப்பதில் முத்திரை பதித்துள்ளார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.