4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்

4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்

4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2020 | 2:26 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் பிரதி பொலிமோ அதிபர்கள் உள்ளிட்ட பலர் ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்துள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்