சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு

by Staff Writer 05-01-2020 | 8:23 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பிற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. இதனைத் தவிர, தேர்தல் குழுவொன்றை அமைக்குமாறு அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்தும் கட்சித்தலைவருடன் கலந்துரையாடப்படவுள்ளது.