2019 இல் டெங்கு காய்ச்சலால் 1,0493 பேர் பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு

2019 இல் டெங்கு காய்ச்சலால் 1,0493 பேர் பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு

2019 இல் டெங்கு காய்ச்சலால் 1,0493 பேர் பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 3:54 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 1,0493 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் இறுதி 5 மாதங்களிலேயே அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இடைக்கிடையே நிலவிய மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 21,567 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அநுர ஜயசேகர தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான முதலாவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர் அநுர ஜயசேகர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்