137 அரச நிறுவனங்களின் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்

137 அரச நிறுவனங்களின் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்

137 அரச நிறுவனங்களின் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 3:46 pm

Colombo (News 1st) கொழும்பு நகரிலுள்ள 137 அரச நிறுவனங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அப்பணிகளிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதி முதல் குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்படவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகள் மற்றும் விகாரைகள், பாடசாலைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைத் தவிர, யானை பிரச்சினை காணப்படும் பகுதிகளில் யானை வேலிகளை அமைத்து அதனை நிர்வகிக்கும் நடவடிக்கைகளிலும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்