முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

by Bella Dalima 04-01-2020 | 5:56 PM
Colombo (News 1st) கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம். உலக அளவில் கணினிகள் மற்றும் லெப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது. இந்த திகதிக்குள், வின்டோஸ் 7-ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது லெப்டாப்பில் வின்டோஸ் 10-ஐ பதிவேற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.