கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் கைது

கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் கைது

by Staff Writer 04-01-2020 | 4:37 PM
Colombo (News 1st) பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரக்கவின் உதவியாளர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர் வசமிருந்து 2 கிராம் நிறையுடைய ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.