ஒருகொடவத்தை - அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது

ஒருகொடவத்தை - அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது

by Staff Writer 04-01-2020 | 4:32 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை - அம்பத்தலே வீதி இன்றும் நாளையும் இரவு 10 மணி முதல் மறுதினம் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். புத்கமுவ இரும்பு பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த வீதி மூடப்படவுள்ளது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.