ரஞ்சன் ராமநாயக்க கைது

ரஞ்சன் ராமநாயக்க கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Jan, 2020 | 7:35 pm

Colombo (News 1st)  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டை பொலிஸ் குழுவொன்று இன்று சோதனையிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக​ ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது வீடு சோதனையிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இருந்து அனுமதி பெறப்படாத துப்பாக்கி ஒன்றும் 118 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்