பாடல்களை சத்தமாக ஒலிபரப்பும் பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து

பாடல்களை சத்தமாக ஒலிபரப்பும் பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து

பாடல்களை சத்தமாக ஒலிபரப்பும் பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 4:27 pm

Colombo (News 1st) பயணிகளை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையில் பாடல்களை ஒலிபரப்பும் பஸ்களுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அவ்வாறான பஸ்கள் கண்டறியப்படுமாயின், அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவதற்கு கடந்த முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பஸ்களில் ஒலிபரப்புவதற்கு ஏதுவான பாடல்கள் அடங்கிய தொகுப்பு தற்போது வழங்கப்பட்டு வருவதாக
மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், விதிமுறைகளை மீறும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்