by Bella Dalima 04-01-2020 | 3:31 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி, ஹம்பாந்தோட்டை, காலி, தங்காலை ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
ஹெரோயினுடன் 8 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 1100 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை மாதிவெல, கொம்பனித்தெரு, முகத்துவாரம் மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்கேநபர்களிடமிருந்து 11 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.