ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

எழுத்தாளர் Bella Dalima

04 Jan, 2020 | 5:56 pm

Colombo (News 1st) கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம்.

உலக அளவில் கணினிகள் மற்றும் லெப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.

எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது.

இந்த திகதிக்குள், வின்டோஸ் 7-ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது லெப்டாப்பில் வின்டோஸ் 10-ஐ பதிவேற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்