இரண்டு சிறுத்தைகள் கொலை; விசாரணைகள் ஆரம்பம்

இரண்டு சிறுத்தைகள் கொலை; விசாரணைகள் ஆரம்பம்

இரண்டு சிறுத்தைகள் கொலை; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 4:16 pm

Colombo (News 1st) உடவளவ மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உடவளவை தேசிய சரணாலயத்திற்கு அருகிலுள்ள மவ்ஆர நீர்த்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுத்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, யடியாந்தோட்டை – பேரகஸ் சந்தி, பில்லஹேன பிரதேசத்தில் சிறுத்தையொன்று பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவங்களானது திட்டமிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து உடவளவ சரணாலயத்தில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று அதிகாலை சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்