by Staff Writer 03-01-2020 | 6:24 PM
Colombo (News 1st) யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கபில களுவத்த இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சர்வமத அனுஷ்டானங்களுடன் பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கபில களுவத்த கடமையாற்றியவராவார்.
இதேவேளை, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த மகேஷ் சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.