மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2020 | 4:27 pm

Colombo (News 1st) கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்நபர் இதுவரை காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 24 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 44 வயதில் செல்லப்பிள்ளை மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்