மலையக மார்க்க ரயில் சேவையை அதிகரிக்க எதிர்பார்ப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையை அதிகரிக்க எதிர்பார்ப்பு

by Staff Writer 03-01-2020 | 3:50 PM
Colombo (News 1st) மலையக மார்க்கத்திலான சேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அதிக வலுக்கொண்ட 4 என்ஜின்கள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் 4 அதிக வலுக்கொண்ட என்ஜின்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிக வலுக்கொண்ட என்ஜின் ஒன்று மலையக மார்க்கத்திலான சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அனைத்து அதிக வலுக்கொண்ட என்ஜின்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர், மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.