மருதானை ரயில் நிலையம் முன்பாக மானிய விலையில் மரக்கறி, உலர் உணவுப் பொதிகள் விற்பனை

மருதானை ரயில் நிலையம் முன்பாக மானிய விலையில் மரக்கறி, உலர் உணவுப் பொதிகள் விற்பனை

மருதானை ரயில் நிலையம் முன்பாக மானிய விலையில் மரக்கறி, உலர் உணவுப் பொதிகள் விற்பனை

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2020 | 4:57 pm

Colombo (News 1st) ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சு நேற்று (02) முதல் மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறி மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, மரக்கறி வகைகள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாக கொள்வனவு செய்ய முடியும்.

ரயில்களில் பயணிக்கும் அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியில் ஒரு கிலோகிராம் பருப்பு, 2 கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி, ஒரு கிலோகிராம் சீனி மற்றும் சிறிய டின் மீன் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

மரக்கறி பொதியில் கெரட், லீக்ஸ், போஞ்சி, வற்றாழைக் கிழங்கு, பூசணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, எலுமிச்சை, பொன்னாங்கன்னி ஆகியன காணப்படுகின்றன.

இந்த திட்டத்தை ஆரம்பித்து கருத்து வௌியிட்ட ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, இன்று முதல் புறக்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்