முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

by Staff Writer 02-01-2020 | 7:33 PM
Colombo (News 1st) முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினாலும் 2ஆவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவினாலும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புகை சான்றிதழுக்கான வரி குறைக்கப்பட்டமை, காபன் வரி நீக்கப்பட்டமை, வரி குறைக்கப்பட்டமை ஆகியவற்றினால் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை குறைக்க இயலுமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.