புதுவருடத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா பதிவு

புதுவருடத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா பதிவு

புதுவருடத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2020 | 4:33 pm

Colombo (News 1st) புத்தாண்டு தினத்தன்று உலகில் அதிகூடிய குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று (01) 67,385 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் (UNICEF) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோன்று,
சீனாவில் 46,299 குழந்தைகளும்
நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும்
பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும்
இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும்
அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் பிறந்துள்ளன.

யுனிசெப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், புத்தாண்டு தினமான நேற்று இந்தியாவில் பிறப்பு வீதம் 17 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று உலகளாவிய ரீதியில் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளிலும் மில்லியன் கணக்கான குழந்தைகள் பிறப்பதாக யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

முன்கூட்டிய பிறப்பு , பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் காரணமாக குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்துக்குள் இறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்