நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2020 | 2:37 pm

Colombo (News 1st) நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகள் கிடைத்துள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளுக்கு அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசி தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்