புதிய மூலோபாய ஆயுதம் அறிமுகம் - வட கொரிய ஜனாதிபதி

புதிய மூலோபாய ஆயுதம் அறிமுகம் - வட கொரிய ஜனாதிபதி

by Chandrasekaram Chandravadani 01-01-2020 | 4:31 PM
Colombo (News 1st) அணுவாயுத மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனைகளுக்கு விதித்திருந்த தடையை முடிவுக்கு கொண்டுவருவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தமது நாடு புதிய மூலோபாய ஆயுதமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகளுக்கான கதவு திறந்தே உள்ளதெனவும் ஆயுதத்தின் பரிசோதனை அமெரிக்காவின் நடத்தையிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு வட கொரியா அணுவாயுதம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனைகளை இடைநிறுத்தியிருந்தது.