சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணப்பொதி

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணப்பொதி வழங்க தீர்மானம்

by Staff Writer 01-01-2020 | 4:03 PM
Colombo (News 1st) சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரிசி, கோதுமை மா, சீனி, கறுவாடு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 3,600 ரூபாய் பெறுமதியான உணவுப்பொதி மாதாந்தம் வழங்கப்படவுள்ளது. உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறை வருமானம் பெறும் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளன.