பாதாள குழுவினரை கட்டுப்படுத்த விசேட சோதனைப் பிரிவு

பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்த விசேட சோதனைப் பிரிவு

by Staff Writer 31-12-2019 | 3:46 PM
Colombo (News 1st) அவிசாவளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட சோதனைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் இந்தப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், அவிசாவளையிலிருந்து வெல்லம்பிட்டி வரையான களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களை அச்சுறுத்தி அவர்களிடமுள்ள காணிகளை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, சட்டவிரோதமாக அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கப்பம் பெறுபவர்களை ஒடுக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத மற்றும் அனுமதியின்றி காணிகளை நிரப்புதல், கப்பம் பெறுதல் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து 071 3680001 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிட முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.