தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

by Staff Writer 31-12-2019 | 3:06 PM
Colombo (News 1st) மாவட்ட மட்டத்தில் தேசிய பழ உற்பத்தியை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பழ இறக்குமதியைத் தடை செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.