by Staff Writer 31-12-2019 | 2:38 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்கேநபர்கள் இருவருக்கும் ரூமி மொஹமட்டினால் தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்பிரகாரம், அவரை கைது செய்து குறித்த வழக்கின் சந்தேகநபராகப் பெயரிட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்
இதேவேளை, ரூமி மொஹமட்டுக்கு வௌிநாடு செல்வதற்குத் தடை விதித்து, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.