வரக்காபொல வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

வரக்காபொல வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

வரக்காபொல வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2019 | 2:46 pm

Colombo (News 1st) கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல – ரங்வல சந்திக்கருகில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை விமானப்படை முகாமில் கடமையாற்றும் 4 விமானப்படை உறுப்பினர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய, பல்லபான, கொஸ்கம, வரங்கஹவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 28, 37 மற்றும் 38 வயதானவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று வரக்காபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, மாவனெல்ல – கும்பல்கம ஹெம்மாத்தமக பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்