சூடானில் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சூடானில் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சூடானில் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Dec, 2019 | 3:26 pm

Colombo (News 1st) சூடானில் உளவுத்துறை அதிகாரிகள் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து 36 வயதான அஹ்மட் அல் கைர் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதன்போது அவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாநிலமான கசாலாவில் உள்ள தடுப்புமுகாமில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரிகள் 29 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் கொலைக்கு நீதி கோரி தலைநகர் கார்டோமில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்