சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக இலஞ்சம் பெற்ற அறுவருக்கு விளக்கமறியல்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக இலஞ்சம் பெற்ற அறுவருக்கு விளக்கமறியல்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக இலஞ்சம் பெற்ற அறுவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2019 | 4:31 pm

Colombo (News 1st) மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்திற்கு அருகாமையில் இலஞ்சம் பெற்ற 6 பேர், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (31) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட அறுவர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டனர்.

புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒருவரிடம் 10,000 ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்