விவசாயிகளின் வாழ்வாதார மேம்படுத்தலில் உலக வங்கி...

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி

by Staff Writer 30-12-2019 | 2:59 PM
Colombo (News 1st) சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் செயற்றிட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 14 கோடி அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதுடன் இதன்மூலம் 6 மாகாணங்களைச் சேர்ந்த 4,70,000 இற்கும் மேற்பட்ட சிறியளவிலான விவசாயிகள் பயன்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்தித் திறனை மேம்டுத்துவதும் உற்பத்தி விற்பனை வசதிகளை விரிவுபடுத்துவதும் இந்த செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மஹாவலி விவசாய நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.