சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 10 பேர் கைது

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது

by Staff Writer 30-12-2019 | 7:14 PM
Colombo (News 1st) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கஹவத்த பன்வில வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையுடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கஹவத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹொரணை கிரிகலஹேன பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கப்பம் கோருதல் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த 3 வாள்கள் மற்றும் 6 கத்திகளை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குபவர்களை குறித்த குழுவினர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.