by Staff Writer 30-12-2019 | 6:55 PM
Colombo (News 1st) இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான D'Arcy Short பெயரிடப்பட்டுள்ளார்.
பந்துவீச்சாளரான சீன் அபோர்டின் வெற்றிடத்துக்குப் பதிலாகவே இந்த மாற்றம் அவுஸ்திரேலிய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 2 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பை D'Arcy Short பெற்றுள்ளார்.
இறுதியாக அவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
இதுவரையில் 4 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள 29 வயதான D'Arcy Short அதில் 83 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி மும்பை வன்கடே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பு SCC மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் மற்றும் என்.சி.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தப்போட்டி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டியில் என்.சி.சி. அணியை ஏஞ்சலோ பெரேராவும் சிலாபம் மேரியன்ஸ் அணியை ஷெஹான் ஜெயசூரியவும் வழிநடத்தவுள்ளனர்.