நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2019 | 3:36 pm

Colombo (News 1st) நுவரெலியாவில் மரக்கறிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் படி,
1 கிலோகிராம் கோவா 115 தொடக்கம் 120 ரூபா
உருளைக்கிழங்கு 140 தொடக்கம் 145 ரூபா
பீற்றூட் 170 தொடக்கம் 180 ரூபா
சலாது 320 ரூபா
கரட், லீக்ஸ் ஆகியன 330
முள்ளங்கி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அண்மையில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் நுவரெலியாவில் விவசாயச் செய்கை அழிவடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்