சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

by Staff Writer 28-12-2019 | 7:17 PM
Colombo (News 1st) சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டுத் தயாரிப்பிலான 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் அதிகபட்ச சில்லறை விலையாக 1,005 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீமெந்துத் தூள் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் பொதியிடப்பட்ட ஒரு மூடை சீமெந்தின் அதிகபட்ச சில்லறை விலை 950 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதியிடப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூடையின் அதிகபட்ச சில்லறை விலை 930 ரூபாவாகும். அதிகபட்ச சில்லறை விலைக்கு மேற்பட்ட விலையில் விற்பனை செய்தல், விற்பனைக்கு கொண்டுசெல்லல் மற்றும் காட்சிப்படுத்தல் என்பன தவிர்க்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.